தேசிய கடற்படை தினம்: போர் நினைவு சின்னத்தில் மரியாதை
தேசிய கடற்படை தினம்: போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போரில் இந்தியா பெற்ற வெற்றி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4-ந் தேதி தேசிய கடற்படை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தேசிய கடற்படை தினத்தில் சென்னை போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் கடற்படை தினத்தையொட்டி சென்னை கோட்டை அருகே உள்ள போர் நினைவு சின்னம் நேற்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மாலை 4.30 மணிக்கு தமிழகம்-புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி ‘ரியர் அட்மிரல்’ அலோக் பட்நாகர் போர் நினைவு சின்னத்துக்கு வந்து, மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.