ஆர்.கே. நகர் தொகுதியில் பா.ஜ.க. வெற்றி உறுதியாகிவிட்டது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார்.
அவனியாபுரம்,
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமனுடன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டோம். புயல் பாதித்த பகுதியில் இறப்பு குறித்து தவறான தகவல்கள் சொல்கிறார்கள் ஆக்கப்பூர்வமாக புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நற்பணிகள் செய்து வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் நம்பிக்கையுடன் களம் இறங்கி உள்ளோம். பா.ஜ.க. வெற்றி உறுதியாகி விட்டது. மக்களைப் பற்றிய தொலை நோக்கு சிந்தனை முந்தைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியைப் பற்றி சில அரசியல் தலைவர்கள் தவறான கருத்து சொல்வது முறையற்றது. புயல் பாதித்த பகுதியில் தமிழக அரசு முன் எச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும். கடலுக்குள் சென்ற மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக அரசு கணக்கீடு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.