ஊத்துக்கோட்டை அருகே விவசாயிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

விவசாயியை கத்தியால் குத்தியது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-12-03 22:51 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டையை அடுத்த பென்னாலூர்பேட்டை அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 55) விவசாயி. இவரது மகன் அய்யப்பன் (30). அதே கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (30). லாரி டிரைவர். இவரது உறவுக்கார பெண்ணுடன் அய்யப்பன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கோடீஸ்வரன் பல முறை அய்யப்பளை எச்சரித்தார். நேற்று முன்தினம் மாலை அய்யப்பன் அந்த பெண்ணுடன் தனியாக பேசி கொண்டிருந்ததை கோடீஸ்வரன் பார்த்தார். இதனால் கோடீஸ்வரனுகும் அய்யப்பனுக்கும் இடையே தகராறு நடந்தது.

அப்போது அங்கு முனிரத்தினம் வந்தார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன், முனிரத்தினத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கோடீஸ்வரனை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

பின்னர் அவரை போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்