மும்பையில் சைக்கிள் பயண திட்டம் தொடக்கம்

மும்பையில் ‘ஞாயிற்றுக்கிழமைதோறும் சைக்கிளில் பயண திட்டம்‘ தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2017-12-03 21:33 GMT
மும்பை,

மும்பை கிர்காவ் பகுதியில் இருந்து ஒர்லி கடல்வழி பாலம் வரை சைக்கிளில் பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. இதில், முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நரிமன்பாயிண்ட் என்.சி.பி.ஏ.- ஒர்லி இடையே சைக்கிளில் பொதுமக்கள் பயணம் செய்யும் வசதி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர், மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய்மேத்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே உள்பட பலர் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தனர்.

இந்த திட்டத்தின்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரை பொது மக்கள் நரிமன்பாயிண்ட் என்.சி.பி.ஏ.யில் இருந்து ஒர்லி கடல்வழி மேம்பாலம் முடியும் வரை சைக்கிளில் பயணம் செய்ய முடியும். பொதுமக்களுக்கு மாநகராட்சி தனியார் அமைப்புகள் உதவியுடன் ஹாஜிஅலி கிர்காவ், கடல்வழி மேம்பாலம், என்.சி.பி.ஏ. ஆகிய 4 இடங்களில் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாடகைக்கு விடுகிறது. சைக்கிளுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.100 வாடகையாக வசூலிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்