வெர்சோவா கடற்கரை தூய்மை பணி மீண்டும் தொடங்கியது
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியாவின் ஒரு பகுதியாக, மும்பை வெர்சோவா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் சமூக சேவகரான அப்ரோஸ் ஷா என்பவர் ஈடுபட்டு வந்தார்.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியாவின் ஒரு பகுதியாக, மும்பை வெர்சோவா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் சமூக சேவகரான அப்ரோஸ் ஷா என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில சமூக விரோதிகளின் குறுக்கீடு காரணமாக பணியை அவரால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து அவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து முறையிட்டார். அப்போது வெர்சோவா கடற்கரையில் தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொள்ள தான் அனைத்து வகையிலும் உதவுவதாக சமூக சேவகர் அப்ரோஸ் ஷாவிடம் முதல்-மந்திரி உறுதி அளித்தார்.
இந்த நிலையில் தேசிய சுற்றுச்சூழல் மாநாடு மும்பையில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக வெர்சோவா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரேயும் மீண்டும் தொடங்கி வைத்தனர். மேலும் அவர்களுடன் தூய்மை பணியிலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் போது அப்ரோஸ் ஷாவும் உடன் இருந்தார்.