கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில், மக்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம் சார்பில் தேவி தியேட்டர் எதிரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-12-03 21:15 GMT

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவல்–பெரியார் நகர் மேம்பால பணிகள் முடியும் வரை ஸ்ரீரங்கம்–திருவானைக்காவலுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். ஸ்ரீரங்கம்–ஜங்சன் பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதிக அளவு மருந்துகளையும், ஊழியர்களையும் நியமிக்க வேண்டும், மாலை 5 மணிக்கு மேல் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு வரும் அனைவருக்கும் முறையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம் சார்பில் தேவி தியேட்டர் எதிரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் மோகன்ராம் தலைமை தாங்கினார். செயலாளர் மணிசங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன், சிவாஜி சண்முகம், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்