திருவண்ணாமலையில் குதிரை, மாட்டு சந்தையில் குவிந்த விவசாயிகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை யொட்டி தேரோட்டத்தின் போது திருவண்ணாமலையில் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக குதிரை சந்தை, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலை,
குதிரை, மாட்டு சந்தை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இந்த சந்தை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடலில் நடைபெறுகிறது.
குதிரை சந்தைக்காக திருவண்ணாமலை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் காட்டுவாடி, நாட்டு குதிரை, குவேத் போன்ற வகை குதிரை சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் மாட்டு சந்தையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாட்டு, குதிரை சந்தையில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்து மாடு, குதிரைகளை வாங்கி சென்றனர். மேலும் இந்த சந்தைக்கு அருகில் மாடு மற்றும் குதிரைக்கு கட்டுவதற்கு தேவையான மணி, கயிறு விற்பனை செய்வதற்காக 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த கடைகளில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் குதிரை சந்தை நடைபெற்ற பகுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.