குற்றாலத்தில் 3–வது நாளாக வெள்ளப்பெருக்கு மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
குற்றாலத்தில் நேற்று 3–வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தென்காசி,
குற்றாலத்தில் நேற்று 3–வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அருவிகளில் வெள்ளப்பெருக்குஒகி புயலால் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு தொடங்கிய கனமழை நேற்று முன்தினம் மாலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கானது சீசன் காலங்களை விட அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதுடன், அருவிக்கரை பகுதிகளுக்கு யாரும் செல்லவும் போலீசார் தடை விதித்தனர்.
3–வது நாளாக...நேற்று முன்தினம் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. நேற்று மழையின் அளவு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. ஆனாலும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் 3–வது நாளாக நேற்றும் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து புனித நீராடி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் குளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். நேற்று 3–வது நாளாக வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அய்யப்ப பக்தர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.