திருவள்ளூர் அருகே வாலிபர் தற்கொலை
திருவள்ளூர் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சர்வசக்தி நகரை சேர்ந்தவர் பாசூரான். இவரது மகன் அசோக் என்கிற அசோக்குமார் (வயது 20). இந்த நிலையில் அசோக்குமார் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த 28–ந்தேதியன்று வீட்டில் இருந்த அசோக்குமாருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத அவர் விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.