‘ஒகி’ புயல் காரணமாக இன்று நாகர்கோவில்–திருவனந்தபுரம் உள்பட 5 ரெயில்கள் ரத்து
குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் காரணமாக 5 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் காரணமாக இன்று (சனிக்கிழமை) புனலூர்–கன்னியாகுமரி (ரெயில் எண் 56715), திருவனந்தபுரம்–நாகர்கோவில் (56313), கொல்லம்–கன்னியாகுமரி மெமூ ரெயில் (66304), கன்னியாகுமரி–கொல்லம் மெமூ ரெயில் (66305), நாகர்கோவில்– திருவனந்தபுரம் (56310) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மழை காரணமாக கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்பட வேண்டிய ரெயில்கள் நேற்று நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட்டன.
இதுபோல் வெளி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயில்களும் நாகர்கோவிலோடு நிறுத்தப்பட்டன. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்தது.
இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.