ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை, அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார்; புகழேந்தி பேட்டி
தேசத்துரோக வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி நேற்று சேலம் 4–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
சேலம்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை, அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார். ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. தேர்தல் ஆணையம் பாரதீய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லை.
ஆர்.கே.நகரில் மதுசூதனனை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சி அறிக்கைவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அது வந்து விட்டால், மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை வந்து விடும். எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.