சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

11 வயது சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-11-23 21:43 GMT

மும்பை,

11 வயது சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமி கற்பழிப்பு

மும்பை மாகிமை சேர்ந்த 11 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சிறுமியின் தந்தையின் நண்பரான விஜய் தத்தானி(வயது35) என்பவர் மதுகுடிப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2014–ம் ஆண்டு விஜய் தத்தானி அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனால் பதறிப்போன அவர்கள் விஜய் தத்தானி மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் விஜய் தத்தானி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சிறுமியை கற்பழித்த குற்றத்துக்காக விஜய் தத்தானிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்