சரத்பவார், சுப்ரியா சுலே பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வாலிபர் மீது வழக்குப்பதிவு

சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு எதிராக டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2017-11-22 22:30 GMT
மும்பை,

சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி.க்கு எதிராக டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவதூறு கருத்து

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி டுவிட்டரில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும், அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி.யையும் இழிவுபடுத்தும் வகையில் வால்சந்த் கீதே என்பவர் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து ஒன்றை பதிவிட்டார். அவரது இந்த கருத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி நாக்பூர் நந்தவன போலீஸ் நிலையத்தில் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திர நகரை சேர்ந்த 34 வயது வாலிபர் வால்சந்த் கீதேயை பிடித்து விசாரித்தனர்.

தானேயில் புகார்

இதற்கிடையே சரத்பவார் அவருடைய மகள் சுப்ரியா சுலே பற்றி அவதூறு கருத்து பரப்பிய வால்சந்த் கீதே மீது நடவடிக்கை எடுக்குமாறு தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை சந்தித்து ஜிதேந்திர அவாத் எம்.எல்.ஏ. முறையிட்டார். இதன்பேரில், வர்த்தக்நகர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்