சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-22 22:45 GMT
வெள்ளகோவில்,

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை விலையை ரூ.25 ஆக அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 10 ரேஷன் கடைகள் முன் நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வெள்ளகோவில் உப்புபாளையம் ரேஷன் கடை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் ராசி முத்துக்குமார், வக்கீல் யுவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் வெள்ளகோவில் ஊராட்சி பகுதிகளில் உள்ள தாசவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, புதுப்பை, வீரசோழபுரம், நாச்சிபாளையம், பாப்பம்பாளையம், ஓலப்பாளையம் உள்பட 15 ரேஷன் கடைகள் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதி தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர்.

காங்கேயம் கடைவீதியில் உள்ள ரேஷன் கடை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். காங்கேயம் நகர செயலாளர் மணிவண்ணன் முன்னிலைவகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சேமலையப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சிவராஜா, நகர அவைத்தலைவர் அமானுல்லா, துணை செயலாளர்கள் மகேஸ்வரி, அங்கப்பன், மாவட்ட பிரதிநிதிகள் எம்.எஸ்.சுப்பு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பண்டுபாய், சிபகத்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் உள்ள ரேஷன் கடை முன் காங்கேயம் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கொங்கு முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் எம்.தங்கவேல், பேரூராட்சி முன்னாள் தலைவர் காயத்திரி சின்னச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆலாம்பாடி ரேஷன் கடை முன் ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, சரஸ்வதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வரதப்பம்பாளையம் ரேஷன் கடை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்புக்குட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஊராட்சி செயலாளர் பெரியசாமி, உமாபதி மற்றும் சண்முகம், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னக்கடை வீதியில் உள்ள ரேஷன் கடை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் தனசேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வக்கீல் செல்வராஜ், என்ஜினீயர் பாப்புகண்ணன், முத்துமாணிக்கம், சந்திரசேகர், மதி, முருகானந்தம், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம் ஆகிய பேரூராட்சி மற்றும் தளவாய்பட்டணம், அலங்கியம் உள்பட 16 ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடை முன் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தாராபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்தூர் பேரூர் தி.மு.க. சார்பில் ஹைஸ்கூல் மேடு ரேஷன்கடை முன் பேரூர் செயலாளர் மு.க.அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணை செயலாளர் ஆர்.வீரக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் பாலு, பவுதியப்பன் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் இ.விசாகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல், வேலம்பாளையம், நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை ஊராட்சிகளிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் குண்டடத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன் தலைமையில், காங்கிரஸ் வட்டார தலைவர் ரத்தினசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்