ரெயில்வே தண்டவாளத்தில் புதுமாப்பிள்ளை பிணம் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்
கரூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் புது மாப்பிள்ளை பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார் மனு கொடுத்தனர்.
கரூர்,
நாமக்கல் மாவட்டம் கீழ சாத்தம்பூர் கிராமம் அருகே சுண்டக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது27). லாரி டிரைவரான இவருக்கும், கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே மருதம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகள் வர்ஷாவிற்கும் (19) கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரம் மட்டும் வர்ஷா, கணவருடன் வாழ்ந்துள்ளார். அதன்பின்பு தனது தாய் வீடான மருதம்பட்டிக்கு வர்ஷா வந்தார். மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் மனைவி வர்ஷாவை அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு சரவணன் வந்துள்ளார். ஆனால், அவருடன் செல்ல வர்ஷா மறுத்தார். அவ்வப்போது சரவணன் வந்து வர்ஷாவை குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட்டு பார்ப்பது வழக்கமாம்.
கடந்த 20-ந்தேதி சரவணன், தனது மனைவியை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வர்ஷா வீட்டின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சரவணன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சரவணனின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சரவணனின் தாய் பாப்பாத்தி மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு கரூர் விரைந்து வந்தனர்.
மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் சரவணனின் உடலை பார்த்தனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதனால், அவரது சாவில் உறவினர்கள் சந்தேகமடைந்தனர். இந்த நிலையில் சரவணனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வர்ஷா மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று காலை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உறவினர்கள் வந்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், சரவணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் திருச்சி, சென்னை ரெயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் படி அறிவுறுத்தினார். மேலும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கரூர் அருகே கல்லூரி மாணவர் கார்த்திக் கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த லாரி டிரைவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.