போளூரில் 667 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
போளூரில் 667 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.
போளூர்,
போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ஆண்கள் பள்ளியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தூசி.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் கருணாநிதி, பாக்கியவதி ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 667 மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.