ஆடுமேய்க்கும் தொழிலாளி படுகொலை முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
பென்னாகரம் அருகே ஆடுமேய்க்கும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள காட்டுநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜடையன்(வயது 55). திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த இவர் ஆடுகள் மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு ஜடையன் வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார்.
அப்போது நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் அங்கு வந்து ஜடையனை ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர். மேலும் கயிற்றால் ஜடையனின் கழுத்தை இறுக்கி உள்ளனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ஜடையன் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜடையனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. பின்னர் ஜடையனின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜடையன் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆடுமேய்ப்பது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை தொடர்பாக ஜடையனுக்கும், சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜடையன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.