அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் மறியல் 935 பேர் கைது
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பினர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பை–பாஸ் ரோட்டில் உள்ள மதுரை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கூடினார்கள்.
மதுரை,
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பினர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பை–பாஸ் ரோட்டில் உள்ள மதுரை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கூடினார்கள். அவர்கள் 24 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பென்சன் தொகையை 1–ந் தேதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
போராட்டத்திற்கு சங்க தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பை–பாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எனவே போலீசார் பெண்கள் உள்ளிட்ட 935 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.