விருதுநகர் அருகே சோளக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்த 2 வாலிபர்கள்
விருதுநகர் அருகே சோளக்காட்டில் 2 வாலிபர்கள் மர்மமாக இறந்து கிடந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள சோளக்காட்டில் நேற்று காலை 2 வாலிபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது பற்றி தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த வாலிபர்களின் உடல்களை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த இருவரும் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த ஞானசேகர்(வயது 33), திலகர்(30) என்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு வேப்பிலைப்பட்டி கிராமத்தில் அர்ச்சுனா ஆற்றுப்படுகையில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் வந்து மணல் அள்ளியுள்ளனர். அப்போது மணல் திருட்டு தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், போலீசாருடன் அங்கு வந்ததாகவும் போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் 2 லாரிகளில் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிய வந்தது.
மேலும் இறந்து கிடந்த வாலிபர்கள் ஞானசேகரும், திலகரும் ஆற்றுப்படுகையில் இருந்து ஆற்றைக் கடந்து அழகர்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்று காட்டுப்பகுதிக்குள் தப்பியோடியதாகவும் தெரிய வந்தது.
அவ்வாறு தப்பி ஓடியபோது அப்பகுதியில் பயிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இறந்துள்ளனர். மின் வேலி அமைத்திருந்த கண்ணாயிரம் (60), அவரது மகன் உதயகுமார் (28) ஆகியோர் இறந்து கிடந்த ஞானசேகர் மற்றும் திலகரின் உடல்களை சோளக்காட்டில் வீசிவிட்டு மின் வேலியையும் அகற்றி விட்டனர். கண்ணாயிரத்திடமும், உதயகுமாரிடமும் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இறந்த ஞானசேகர், திலகரின் உறவினர்கள் போலீசார் தாக்கியதில் தான் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர் என்றும், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிய நிவாரணம் கோரியும் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியல் தொடர்ந்தது. நேற்று இரவு 8 மணியளவில் ராமமூர்த்தி ரோட்டில் இறந்த வாலிபர்களின் உறவினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனையடுத்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ செல்வி மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இறந்தவர்களின் உடல் பரிசோதனை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி இறந்தவர்களின் உறவினர்கள் புகார் மனு கொடுத்த பின்பு வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்த போலீசார் தோட்ட உரிமையாளர்கள் கண்ணாயிரம் மற்றும் அவரது மகன் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து மின் வேலி அமைக்க பயன்படுத்திய மின்கம்பியை போலீசார் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விருதுநகரில் நடந்த தொடர் மறியலால் நகரின் கிழக்குப்பகுதியில் பரபரப்பு நிலவியது.