ஆட்டோவில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
ஆட்டோவில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
மும்பை,
மும்பை பாண்டுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஹேமந்த்(வயது26) என்ற வாலிபர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டோவில் இருந்து குழந்தை அழும் சத்தம்கேட்டது. உடனடியாக ஹேமந்த் ஆட்டோவிற்குள் பார்த்தார்.
அப்போது ஆட்டோவின் பின் இருக்கையில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. அங்கு இருந்து அவரால் போலீசாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனடியாக அவர் குழந்தையை படம் பிடித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து உதவிகேட்டார். இந்த பதிவை மும்பை போலீசார் பார்த்தனர்.
இதையடுத்து அவர்கள் ஹேமந்தை தொடர்புகொண்டு, குழந்தையை காஞ்சூர்மார்க் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு கூறினர். உடனடியாக அவர் போலீஸ் நிலையம் சென்று குழந்தையை ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் குழந்தையை சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அது காப்பாற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோரை தேடிவருகின்றனர். மேலும் சாமர்த்தியமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய ஹேமந்தையும் போலீசார் பாராட்டினர்.