குலசேகரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4–ம் வகுப்பு மாணவி பலி

குலசேகரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-20 23:00 GMT
குலசேகரம்,

குலசேகரம் அருகே அண்டூர், வெண்டலிகோட்டை சேர்ந்தவர் துரை. இவர் ஆற்றூரில் சலூன்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீஹரிணி (வயது8). திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தார்.

ஸ்ரீஹரிணிக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆற்றூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால், நோய் குணமாகவில்லை. இதனால், பரிசோதனை செய்து பார்த்த போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குலசேகரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீஹரிணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சலில் மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்