ரிசர்வ் வங்கியில் 526 பணியிடங்கள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி
ரிசர்வ் வங்கியில் ஆபீஸ் அட்டன்ட் பணிக்கு 526 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
வங்கிகளின் வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியில், பணி புரிவதை இளைஞர்கள் பலரும் கவுரவமாகக் கருதுவது உண்டு. தற்போது ரிசர்வ் வங்கியில் ஆபீஸ் அட்டன்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 526 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கிளைகளிலும் உள்ள பணியிட விவரம்: அகமதாபாத் - 39, பெங்களூரு - 58, போபால் - 45, சண்டிகார், சிம்லா - 47, சென்னை - 10, கவுகாத்தி - 10, ஐதராபாத் - 27, ஜம்மு - 19, லக்னோ - 13, கொல்கத்தா - 10, மும்பை - 165, நாக்பூர் -9, புதுடெல்லி - 27, திருவனந்தபுரம் - 47.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-11-1992 மற்றும் 1-11-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பட்டதாரிகள், பள்ளி மேல்நிலைக் கல்வி படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆன்லைன் தேர்வு, மொழித்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.50 செலுத்தினால் போதுமானது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை தேவையான இடத்தில் பதிவேற்றம் அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் இறுதியில் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்ப படிவத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 7-12-2017
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.