கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்
கந்து வட்டி கொடுமையில் இருந்து நெசவாளர்களை காப்பற்ற கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு நேற்று ஈரோட்டில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க தலைவர் செ.தங்கமுத்து தலைமை தாங்கினார். தொ.மு.ச. பேரவை மாநில பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநாட்டை தொடங்கி வைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு துண்டு ஆகியவற்றை வழங்கி பேசினார்.
தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட செயலாளர்கள் சு.முத்துசாமி, என்.நல்லசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். அதைத்தொடர்ந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சுமை தூக்கும் தொழிலாளர்கள்
* ஈரோடு ரெயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். மேலும் இந்த பணியில் வெளிமாநில தொழிலாளர்களை கொண்டு சுமை தூக்கும் பணியை செய்ய முயற்சிக்கும் ‘பார்சல் சர்வீஸ்’ நிறுவனங்கள் தங்களுடைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
* ஈரோடு மாவட்டத்தில் தள்ளுவண்டி தொழிலாளர்கள் வியாபாரம் செய்திட பாதுகாப்பான இடம் ஒதுக்கித்தர வேண்டும். நலவாரிய நடவடிக்கைகளில் நலவாரிய உறுப்பினர்களே நேரில் அணுகி தங்களது கேட்பு மனுக்களை கொடுக்க வேண்டும் என்ற நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். மேலும் முன்பு இருந்தது போல அங்கீகரிக்கப்பட்டு உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மூலம் பயன் பெறும் வகையிலான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
ரூ.400 கோடி
* அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு பிறகு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி தொகை ரூ.400 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள் பணி வாய்ப்பு குறைந்து நலிவடைந்து வருகிறார்கள். எனவே பழைய விரி விகிதாச்சாரத்தில் ஜவுளித்துறைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டும்.
கந்து வட்டி கொடுமை
* கந்துவட்டி கொடுமையால் விசைத்தறி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றிட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி ப.சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராசு, கொள்கை பரப்பு இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.சுப்பிரமணியம், மாநில மாணவர் அணி துணை செயலாளர் ரங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.