லாத்தூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி 7 பயணிகள் பலி
லாத்தூர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 7 பயணிகள் உடல்நசுங்கி பலியானார்கள். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
லாத்தூர்,
மராட்டிய மாநிலம் லாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து நிலங்கா நோக்கி நேற்று மதியம் 2.30 மணியளவில் அரசு பஸ், பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. ஆவுசா தாலுகா சல்புர்கா பகுதியில் சென்ற போது, எதிரே லாத்தூர் நோக்கி வந்த லாரி ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் அரசு பஸ்சின் ஒரு பகுதி உருக்குலைந்து போனது. மேலும், பஸ்சுக்குள் இருந்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 35-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பஸ்சின் இடிபாடுகளை அகற்றி காயம் அடைந்தவர்களை பத்திரமாக மீட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.