குழந்தையிடம் தகாத உறவில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்

குழந்தையிடம் தகாத உறவில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2017-11-18 22:19 GMT

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் வாலிபர் சுரேஷ் கும்பார் (வயது27). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தம்பதிக்கு 11 மாத ஆண் குழந்தை இருந்தது. 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் சுரேஷ் கும்பார் ஆண் குழந்தையை தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். இந்தநிலையில் வாலிபரின் வீட்டில் இருந்த குழந்தை திடீரென கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய், வாலிபரின் வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது வாலிபர் குழந்தையின் உடலில் குண்டூசி குத்திவிட்டதாக கூறினார். இதையடுத்து தாய், குழந்தையை வீட்டிற்கு தூக்கி வந்தார். அப்போது குழந்தையின் ஆசனவாயில் இருந்து ரத்தம் வந்தது.

உடனடியாக அவர் குழந்தையை சிகிச்சைக்காக சயானில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நடந்த மருத்துவசோதனையில் குழந்தையிடம் யாரோ தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையிடம் தகாத உறவில் ஈடுபட்டதாக சுரேஷ் கும்பாரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் கோர்ட்டு குழந்தையிடம் தகாத உறவில் ஈடுபட்ட சுரேஷ் கும்பாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.


மேலும் செய்திகள்