இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் அச்சத்தில் பொதுமக்கள்
திருக்கடையூர் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உள்ளதால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
திருக்கடையூர்,
நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட டி.மணல்மேடு, காடுவெட்டி, ரவணையன் கோட்டகம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த தொகுப்பு வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழமையான இந்த தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. தற்போது பெய்த தொடர்மழையின் காரணமாக தொகுப்பு வீடுகள் மேலும் சேதமடைந்தன. இதனால் தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் இருந்த சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மழை பெய்யும்போது மேற்கூரையின் வழியாக மழைநீர் வீட்டுக்குள் கசிகிறது. இதன்காரணமாக தொகுப்பு வீடுகளில் வசிக்கும் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள தொகுப்பு வீடுகள் வலுவிழந்து இருப்பதால் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் உள்ளோம். மழை பெய்யும்போது தொகுப்பு வீடுகளில் தண்ணீர் கசிவதால் பெரும் அவதியாக உள்ளது. எனவே, இங்குள்ள சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.