திருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேறும் பாதைகளை கலெக்டர் ஆய்வு

தீபத்திருவிழாவன்று பக்தர்கள் மலையேறும் பாதைகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

Update: 2017-11-18 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 2-ந் தேதி ஏற்றப் படுகிறது.

இந்த ஆண்டு தீபத்திருவிழா வின்போது மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் கந்தசாமி, மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மக்கள் ஏறக்கூடிய பாதைகளை வனத்துறை மற்றும் போலீ சாருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

அப்போது பச்சையம்மன் மன்னார்சாமி கோவில், புதுவண்ணான் குளம் 8-வது தெரு, முலைப்பால் தீர்த்தம், கந்தா ஆசிரமம், ரமணர் ஆசிரமம், அரசு கலைக் கல்லூரி அருகில் நகராட்சி சந்தைமேடு எதிரில், சிம்ம தீர்த்த குளம், எமலிங்கம், துர்வாசர் கோவில், வருண லிங்கம் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், தீபத் திருவிழாவின் போது அத்தியந் தல் மற்றும் காஞ்சி ரோடு அபய மண்டபம் ஆகிய பகுதியில் அமைக்கப்பட உள்ள தற்காலிக பஸ் நிலையங் களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தற்காலிக பஸ் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந் தார்.

இதையடுத்து கிரிவலப் பாதையில் உள்ள பக்தர்கள் ஓய்வறை, பவுர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப் பட்டு பொதுமக்கள் பயன் பாட்டில் உள்ள கழிப்பறைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் விரிவாக்க பணிகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மகா தீபம் நடைபெறும் நாளான வருகிற 2-ந் தேதி பக்தர்கள் மற்றும் பொது மக்கள் தாங்கள் கொண்டு வரும் நெய் காணிக்கையினை பெறுவதற்காக பே கோபுரம், ரமணர் ஆசிரமம், பச்சை யம்மன் கோவில் ஆகிய 3 இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெற்றுக் கொள்ளப்படும்.

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மலைக்கு செல்லும் போது என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என வனத்துறை மற்றும் போலீ சாருடன் சென்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மலை ஏறும் பாதைகளாக கண்டறியப் பட்டுள்ள 21 இடங்களில் ஆய்வு செய்யப் பட்டு உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் மலை ஏறுவதால் அங்குள்ள விதைகள், இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் டன் கணக்கில் குப்பைகள் சேருகிறது. மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. பலர் ஆர்வத்தில் மலை மேல் செல்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வீ, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், திருவண்ணா மலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம் உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்