லாலாபேட்டை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை தாக்கிய 5 பேர் கைது
லாலாபேட்டை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த வீரகுமாரன்பட்டியை சேர்ந்த ராஜாவின் மகன் மணிகண்டன்(வயது 20). முசிறியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது பாட்டி வீட்டில் இருந்து வீரவல்லி வழியாக வீரகுமாரன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் சுதாகர் என்பவரை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
வீரவல்லி நான்கு ரோடு அருகே அவர்கள் சென்ற போது வீரவல்லியை சேர்ந்த பீமன் என்கிற முருகவேல் (27), மகேந்திரன் (31), சரத்குமார் (23), பிரதீப்(23), வெற்றிவேல்(24) ஆகிய 5 பேர் சேர்ந்து மணிகண்டனை மறித்தனர்.
5 பேர் கைது
மேலும் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்க கூறி, தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் உள்ள முட்புதற்குள் மணிகண்டனை இழுத்து சென்று தாக்கினர். உடனிருந்த நண்பர் சுதாகர் தப்பி சென்று அருகில் உள்ள வீரகுமாரன்பட்டிக்கு ஆட்களை அழைத்து வரச் சென்றார். ஆனால் அதற்குள் 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தாக்கிய 5 பேரையும் கைது செய்தார்.