ஆவட்டி–அதர்நத்தம் இடையே சர்வீஸ் ரோடு அமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ராமநத்தம் அருகே ஆவட்டியில் இருந்து அதர்நத்தம் இடையே சர்வீஸ் ரோடு அமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-11-18 21:30 GMT

திட்டக்குடி,

ராமநத்தம் அருகே உள்ள திருச்சி– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி குறுக்கு ரோடு அருகில் அதர்நத்தம் கிராமம் உள்ளது. இந்த பகுதி மக்களும் அதன் சுற்று வட்டார கிராம மக்களும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல எந்தவித சர்வீஸ் ரோடு வசதியும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி கிராம மக்கள் சுமார் 1½ கி.மீட்டர் நடந்து சென்று, சாலையின் மறுபுறம் செல்லவேண்டி உள்ளது. இதனால் முதியோர், கர்ப்பிணிகள், சிறுவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆவட்டியில் இருந்து அதர்நத்தம் கிராமத்தை இணைக்கும் வகையில் சர்வீஸ் ரோடு அமைத்து, நிழற்குடை, மின் விளக்கு வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி கிராம மக்கள் அதர்நத்தம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் சார்பில் வள்ளிஅறிவழகி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் செய்திகள்