மும்பையில் ரூ.376 கோடி செலவில் பொது கழிவறைகள் மாநகராட்சி அறிவிப்பு

மும்பையில் ரூ.376 கோடி செலவில் கழிவறைகள் கட்டப்படும் என்றும், இதற்கான பணி ஆணை ஜனவரி 15–ந் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-16 22:12 GMT

மும்பை,

மும்பையில் அடுத்த ஓராண்டில், ரூ.376 கோடி செலவில் 18 ஆயிரத்து 818 கழிவறைகள் கட்டப்படும் என்றும், இதற்கான பணி ஆணை ஜனவரி 15–ந் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த கழிவறைகள் கட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மும்பையை பொறுத்தமட்டில் கோவண்டி, தேவ்னார் மற்றும் குர்லா பகுதிகளில் பெரும்பாலான கழிவறைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்