சாலை விரிவாக்கம்: இந்திரா காந்தி– ராஜீவ் காந்தி சிலைகளை அகற்றக்கூடாது காங்கிரஸ் கட்சியினர் மனு
சாலை விரிவாக்கம்: இந்திரா காந்தி– ராஜீவ் காந்தி சிலைகளை அகற்றக்கூடாது காங்கிரஸ் கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு
நாகர்கோவில்,
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்), பிரின்ஸ், நிர்வாகிகள் தனபால், வைகுண்டதாஸ், டான்போஸ்கோ, கே.டி.உதயம், மகேஷ்லாசர், கிறிஸ்துதாஸ், அசோக்ராஜ், தங்கம் நடேசன், ஜெரால்டு கென்னடி, அந்தோணிமுத்து உள்பட எராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பில் உள்ள பூங்கா ரவுண்டானாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எவ்வித இடையூறும் இல்லாமல் அமைந்துள்ளது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இந்த சிலையை அகற்றக்கூடாது என கலெக்டரிடம் மனு கொடுத்துள் ளோம். கலெக்டரும், இந்திராகாந்தி சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சாலை விரிவாக்கப்பணி நடைபெறும் என வாய்மொழியாக உறுதியளித்துள்ளார்.
இந்தநிலையில் பார்வதிபுரம் சந்திப்பில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலையையும் அகற்ற முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்தன. மத்திய, மாநில அரசுகள் அரசியல் உள்நோக்கத்தோடு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிலைகளை அகற்ற முயற்சிப்பதாக பொதுமக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் கருதுகின்றனர். எனவே போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இன்றி அமைந்துள்ள இந்த சிலைகளை அகற்றக்கூடாது. அதையும் மீறி அகற்ற முயற்சித்தால் மிகப்பெரிய போராட்டங்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.