கிரானைட் முறைகேடு வழக்கு மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலூர் கோர்ட்டில் ரூ.257 கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்பட 15 பேர் மீது போலீசார் 5191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடைபெற்றதாக பி.ஆர்.பி. உள்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது போலீசார் 98 வழக்குகளை தொடர்ந்தனர். இவற்றில் இதுவரை 78 வழக்குகளுக்கு மேலூர் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். நேற்று மேலும் ஒரு குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
அதன் விவரம் வருமாறு:- கீழவளவு சக்கரைபீர் தர்கா மலை அடிவாரத்தில் ஒலிம்பஸ் கிரானைட் குவாரி இயங்கியது. இங்கு அனுமதி பெற்ற இடத்தை காட்டிலும் அரசு கனிம வளத்துறை இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ.257 கோடி முறைகேடு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அப்போதைய கீழவளவு கிராம நிர்வாக அலுவலர் பார்த்தீபன் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், நாகராஜன், முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி, பாலசுப்பிரமணியன், கனிம வளத்துறை திட்ட அதிகாரிகள் ஜவகர், மனோகரன் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் மீதான விசாரணை மேலூர் கோர்ட்டில் நடைபெற்று, நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதற்காக அரசு சிறப்பு வக்கீல் ஷீலா உள்ளிட்ட போலீசார் நேற்று மேலூர் கோர்ட்டிற்கு வந்தனர். அவர்கள் ரூ.257 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு செய்ததாக துரைதயாநிதி உள்பட 15 பேர் மீது 5 ஆயிரத்து 191 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திகையை மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.