அம்மாபேட்டை பகுதியில் மேட்டூர் அணையின் வலது கரை வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அம்மாபேட்டை பகுதியில் மேட்டூர் அணையின் வலது கரை வாய்க்காலின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அம்மாபேட்டை,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இதில் வலது கரை வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களும், இடது கரை வாய்க்கால் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. அணை நிரம்பும்போது பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முறை வைத்து தண்ணீர் திறக்கிறார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை பொங்கபாலி கரடு அருகே வலது கரை வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அளவீடு செய்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அம்மாபேட்டை பொதுப்பணித்துறை அதிகாரி முருகேசன், மண்டல துணை தாசில்தார் சண்முகசுந்தரம், நில வருவாய் ஆய்வாளர் ஜமுனாதேவி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டார்கள். இதையொட்டி அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
சென்னிமலை
இதேபோல் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி பகுதியில் கீழ்பவானி கிளை வாய்க்காலின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை சார்பில் அகற்றப்பட்டது.
பாரவலசு என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிரிந்து நத்தக்காட்டுப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக கருங்கவுண்டன்பாளையம் என்ற கிராமம் வரை செல்கிறது. இந்த வாய்க்காலின் இருபுறங்களிலும் குடிசைகள், சுற்றுச்சுவர்கள் என பல்வேறு வகைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் இன்னும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது என்றும் அவற்றையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.