தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை

கோபி அருகே நூற்பாலை குடியிருப்பில் தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை

Update: 2017-11-16 23:00 GMT
கடத்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கலைச்சாமி (வயது 46). இவர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தனியார் நூற்பாலையில் தரநிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுடைய மகள் சங்கீதா (16). கலைச்சாமியின் மனைவி மற்றும் மகள் பெருந்துறையில் வசித்து வந்தனர். கலைச்சாமி மட்டும் நூற்பாலை குடியிருப்பில் உள்ள வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் நூற்பாலை குடியிருப்பில் உள்ள வீட்டில் தலை மற்றும் உதட்டில் ரத்த காயங்களுடன் கலைச்சாமி பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கோவை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் சங்கீதாவும் சம்பவ இடத்துக்கு வந்து அங்குள்ள தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்சாமி கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்