மினிலாரி மீது கார் மோதல்: 4 பேர் படுகாயம்

மினிலாரி மீது கார் மோதல்: 4 பேர் படுகாயம்

Update: 2017-11-16 22:45 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியில் இருந்து தென்னை மட்டை தூளை ஏற்றிக் கொண்டு மினிலாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை அதே ஊரை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் தொழிலாளர்கள் 2 பேர் வந்தனர். திண்டுக்கல் -கரூர் நான்கு வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் மினிலாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது கரூரை நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் ஏறி மறுபுறம் சென்று கொண்டிருந்த மினிலாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் அப்துல்ரகீம் (42), லாரி டிரைவர் சிவப்பிரகாசம் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்