திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம்: பிளஸ்-2 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 வாலிபர்கள் கைது
திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெகமம்,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள செஞ்சேரிப்புத்தூரை சேர்ந்தவர் ஜான்சிபிரியா ( வயது 17). தாய், தந்தையை இழந்த இவர் அங்குள்ள தனது பாட்டி கமலா வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12- ந் தேதி வீட்டில் தீக்காயங்களுடன் ஜான்சிபிரியா உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில் அவர் தன் மீது காதலன் செல்வக்குமார் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறியதால், நெகமம்போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக 3 தனிப்படை அமைத்து, ஈரோடு, அந்தியூர், மேட்டுப்பாளையம், திருப்பூர் பகுதிகளில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஜான்சி பிரியாவுக்கும் அதே ஊரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வக்குமார் (22), என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்த நிலையில் செல்வக்குமார் அவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிகிறது.
பின்னர் செல்வக்குமார் ஜான்சி பிரியாவிடம் இருந்து விலகினார். இதனைதொடர்ந்து அதே ஊரை சேர்ந்த பிட்டராக வேலை செய்யும் சண்முக வடிவேல் (31) என்பவருக்கும், ஜான்சிபிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவரும் திருமண ஆசைக்காட்டி ஜான்சி பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு பேரும் ஏமாற்றி விட்டதால் மனவேதனை அடைந்த ஜான்சிபிரியா தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டதும், பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக செல்வக்குமார், சண்முக வடிவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.