கூட்டுறவு சிறப்பங்காடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் காட்டப்படாத ரூ.1½ லட்சம் பறிமுதல்
சேலத்தில் கூட்டுறவு சிறப்பங்காடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் பழைய பஸ்நிலையம் அருகே கூட்டுறவு சிறப்பங்காடி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மளிகை பொருட்கள் பிரிவில் மேலாளராக சிவகுமார், விற்பனை பிரிவு அலுவலராக வசந்தா உள்பட 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி, ஆதிதிராவிடர் நலவிடுதி, உண்டு உறைவிட பள்ளிகள், அம்மா உணவகம், அரசு ஆஸ்பத்திரிகள், அன்னதானம் வழங்கப்படும் கோவில்கள் ஆகியவற்றுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதன்மூலம் மாதந்தோறும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. எண்ணெய், பருப்பு, மிளகாய், உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கமிஷன் தொகை பெறப்படுவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் மாவட்ட ஆய்வுகுழு அலுவலர்கள் என 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு கூட்டுறவு சிறப்பங்காடிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மளிகை பொருட்கள் பிரிவில் திடீரென சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் மேலாளர் சிவகுமார், விற்பனை பிரிவு அலுவலர் வசந்தா ஆகியோர் அங்கிருந்தனர். நேற்று ரூ.700-க்கு மட்டும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அங்கு பொருட்கள் இருக்கும் இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 650 கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கணக்கில் காட்டப்படாத இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவகுமார், வசந்தாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.