நெல்லை மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்

நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

Update: 2017-11-16 20:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நெல்லை தாலுகா மதவக்குறிச்சி அருகே உள்ள துவராசி, சிவனியார்குளம், பாளையங்கோட்டை தாலுகா வி.எம்.சத்திரம், மானூர் தாலுகா மானூர் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

ராதாபுரம் தாலுகா சவுந்திர பாண்டியபுரம், அம்பை தாலுகா கோவிந்தபேரி, நாங்குநேரி தாலுகா உன்னங்குளம், சேரன்மாதேவி தாலுகா கொழுமடை, கேசவசத்திரம், சங்கரன்கோவில் தாலுகா குலசேகரமங்கலம், திருவேங்கடம் தாலுகா பெருங்கோட்டூர், ஆலங்குளம் தாலுகா மாறாந்தை, கடையநல்லூர் தாலுகா மடத்துப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், வருவாய்த்துறை சான்றிதழ்கள், சாலை, குடிநீர் வசதி போன்றவை குறித்து அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்