காங்கிரசில் இருந்து அம்பரீஷ் விலகுகிறார்?
மண்டியாவில் நடிகை ரம்யாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், காங்கிரசில் இருந்து அம்பரீஷ் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
இந்த நிலையில் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் அம்பரீஷ் கலந்து கொள்ளவில்லை. மண்டியா மாவட்ட காங்கிரசில் அம்பரீஷ் முக்கியமான தலைவராக இருக்கிறார்.
ஆனால் அந்த மாவட்டத்தில் முன்பு எம்.பி.யாக இருந்த நடிகை ரம்யாவுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் அம்பரீஷ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் காங்கிரசில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் காங்கிரசை விட்டு விலகுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.