ராயப்பேட்டையில் மின்சாரம் தாக்கி மின்சார வாரிய ஊழியர் படுகாயம்

மின்சாரம் தாக்கி மின்சார வாரிய ஊழியர் படுகாயம் பழுதுநீக்கிய போது டிரான்ஸ்பார்மரில் சிக்கினார்.

Update: 2017-11-15 22:30 GMT
சென்னை,

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உசேன் (வயது 51). மின்சார வாரிய ஊழியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மின்மாற்றிக்கு மின்சாரம் வரும் கம்பிகளில் தவறுதலாக கைப்பட்டதில் உயர் மின்னழுத்தம் தாக்கி கை கருகியது. அதிர்ச்சியில் உறைந்தபடி டிரான்ஸ்பார்மரில் உசேன் உட்கார்ந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உசேனை மீட்டு அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்