வெடிகள் வெடித்து சிதறியதில் பட்டாசு ஆலை தரைமட்டம்; பெண் பலி
நாகையில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வெடிகள் வெடித்து சிதறியதில் ஆலை தரைமட்டமானது. பெண் கருகி இறந்தார்.
நாகப்பட்டினம்,
நாகை வாணக்காரத் தெருவை சேர்ந்தவர் சவுந்தரவள்ளி (வயது55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை நாகை வடகுடிசாலையில் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு வேலை நடைபெறும். தீபாவளி மற்றும் கோவில் திருவிழா போன்றவற்றுக்காக இங்கு ராக்கெட் வெடி, குப்பை வெடி, அணுகுண்டு, நாட்டு வெடி, புஷ்வானம் போன்ற பல ரகங்களில் வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ஆலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் அருகே உள்ள நரியங்குடியை சேர்ந்த முருகையன் மனைவி நாகம்மாள் (52) என்பவர் மட்டும் நேற்றுமுன்தினம் இரவு காவலுக்கு படுத்து இருந்தார்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம் கேட்டது. தொடர்ந்து 20 நிமிடங்கள் வானில் வெடிகள் வெடித்து சிதறின. அந்த வட்டாரமே தீப்பிழம்பாக காட்சியளித்தது.
வெடிச்சத்தம் கேட்டு அதிகாலையில் தூங்கி கொண்டு இருந்த மக்கள் பீதியுடன் எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு ஆலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக நாகை தீயணைப்புப்படையினர் 2 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆலை இயங்கி வந்த கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தனர். அப்போது நாகம்மாள் உடல் கருகி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாகூர் போலீசார், நாகம்மாள் உடலை கைப்பற்றி நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், வருவாய் அதிகாரி கருணாகரன், உதவி கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ் முக், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.