மகன், மகளுடன் விஷம் குடித்து சத்துணவு பெண் உதவியாளர் தற்கொலை முயற்சி
பாபநாசம் அருகே நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை வாங்கி பொதுமக்களிடம் கொடுக்க முடியாததால் சத்துணவு பெண் உதவியாளர் ஒருவர் தனது மகன், மகளுடன் விஷம் குடித்தார். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 45). இவர் வடக்குமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் கலைச்செல்வி ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் முகவராகவும் பணியாற்றி வருகிறார். கலைச்செல்விக்கு கவுதமன் (29), என்ற மகனும் ரமணா(25) என்ற மகளும் உள்ளனர். இதில் கவுதமன் எம்.பி.ஏ. படித்து விட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். மகள் ரமணா பி.காம் படித்துள்ளார். கலைச்செல்வி முகவராக உள்ள நிதி நிறுவனத்தில் மதுரை மற்றும் பாபநாசம் தாலுகா களக்குடி கிராமத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 180 பேர் முகவர்களாக உள்ளனர்.
ரூ.7 லட்சம்
இந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பணம் செலுத்த தொடங்கினர். இந்த நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு மூடப்பட்டது. கலைச்செல்வி திருவையாத்துக்குடி, வளத்தாமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள உறுப்பினர்கள் 114 பேரிடம் ரூ.100, 500, 1000 என வசூல் செய்து ரூ.7 லட்சம் வரை ஏஜெண்டுகளிடம் கொடுத்துள்ளார். இதற்கான ரசீதையும் அவர்கள் வைத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி நிதி நிறுவன ஏஜெண்டுகள் கலைச்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சாலியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு வாருங்கள் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கலைச்செல்வி ஆதார்அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் இதில் பணம் செலுத்திய உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு சாலியமங்கலத்துக்கு சென்றார்.
விஷம் குடித்தனர்
அப்போது நிதி நிறுவன ஏஜெண்டுகள் பணம் செலுத்திய மக்களிடம் அவர்களின் பணத்தை திருப்பி கொடுக்க மேலும் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறினர். இந்த நிலையில் நேற்று காலையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை என மனம்வருந்தி கலைச்செல்வி அவருடைய மகன் கவுதமன், மகள் ரமணா 3 பேரும் சேர்ந்து பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தனர்.
இதனால் மயங்கி விழுந்து அவர்கள் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.