நாமக்கல் அருகே குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு
நாமக்கல் அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ளது வகுரம்பட்டி ஊராட்சி. இங்குள்ள கணவாய்ப்பட்டி மேட்டில் இருந்து வகுரம்பட்டி செல்லும் சாலை அருகே குடிநீர் குழாய் உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் அடிக்கடி சிலர் குப்பைகளை கொட்டி செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து லாரி ஒன்று குப்பைகளை ஏற்றிச் சென்று, வகுரம்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டிவிட்டு சென்று உள்ளது. பின்னர் மீண்டும் குப்பைகளை கொட்ட, அந்த லாரி வந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வகுரம்பட்டி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கு குப்பைகளை கொட்டி செல்வதால் தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் மாசடைவதோடு ,அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மருத்துவ கழிவு பொருட்களும் அங்கு கொட்டப்படுவதாக அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் அங்கு வர வழைக்கப்பட்டு ஏற்கனவே கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.