வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் பல்வேறு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு தாலுகாவுக்கு உள்பட்ட பெரும்பள்ளம் ஓடை உள்பட பல்வேறு நீர்நிலைகளை ஒட்டி இருக்கும் ஓடைப்புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டு உள்ளது. இது பல ஆண்டுகளாக இந்த பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்குள்ளவர்கள் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் நேற்று ஒன்று திரண்டு ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.நாச்சிமுத்து தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் என்.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பிரசன்னா உள்பட பலர் பேசினார்கள்.
போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் குடியிருந்து வரும் பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கான இடம் கடந்த 1975-ம் ஆண்டு நத்தம் பெயரில் பட்டா வழங்கப்பட்டவை. ஆனால் தற்போது அவை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறப்பட்டு அகற்றப்பட உள்ளதாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எந்த நிலமோ, உடமைகளோ இல்லாமல் உள்ளனர். தினசரி கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் எங்களை அகற்றினால் சொந்த மண்ணில் அகதிகள் ஆகும் நிலை ஏற்படும். ஏற்கனவே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 879 வீடுகள் இடிக்கப்பட்டன. அந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு உரிய மாற்று இடம் மற்றும் வீடு கட்ட உதவிகள் வழங்காத நிலையில், மீண்டும் வீடுகள் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அச்சமாக உள்ளது.
இந்த நடவடிக்கையினால் 2 ஆயிரத்து 922 வீடுகள் பாதிக்கப்படும். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் தர மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீர்நிலை பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாற்று இடத்தில் அரசே வீடுகள் கட்டித்தர வேண்டும். வீடுகள் கட்டும் வரை குடியிருக்கும் வீடுகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் பொதுமக்கள் தாசில்தார் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ஜெயக்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.
எனவே தாசில்தார் நேரடியாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள், ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கும்வரை சுமார் 6 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அவர்களிடம் தாசில்தார் ஜெயக்குமார் பேசும்போது கூறியதாவது:-
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஐகோர்ட்டு விடுத்து உள்ள உத்தரவின் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக முதல் கட்ட அறிவிப்பு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 நாட்களில் மீண்டும் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கும். ஐகோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இங்கு இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மாவட்ட கலெக்டர், கால அவகாசம் அளித்து உள்ளார். மேலும், ஈரோடு மாநகரை ஒட்டிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கவும், கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே உங்கள் கோரிக்கைகள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாசில்தார் அளித்த வாக்குறுதியின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தையொட்டி நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயில்களில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அந்த வழியாக சென்ற அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.