போடியில் 1½ கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது மதுபானம் விற்றவர்களும் பிடிபட்டனர்

போடியில் 1½ கிலோ கஞ்சாவுடன் மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபானம் விற்றவர்களும் பிடிபட்டனர்.

Update: 2017-11-14 21:45 GMT

போடி,

போடி நந்தவனம் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போடி நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி அவருடைய தலைமையில் போலீசார் நந்தவனம் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் போடி நந்தவன தெருவை சேர்ந்த காந்தி மனைவி லட்சுமி (வயது 60) என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று குலாளர்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 2 பேர் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையொட்டி 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் குலாளர்பாளையத்தை சேர்ந்த ஜெயராணி (40), சின்னமொக்கையன் (48) என்று தெரிய வந்தது.

இதையொட்டி 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்