களக்காடு அருகே குளத்து தண்ணீரை பருகும் கிராம மக்கள்
களக்காடு அருகே தெற்கு புளியங்குளத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் குளத்து தண்ணீரை பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு,

குடிநீர் தட்டுப்பாடு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள தெற்கு புளியங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்துள்ளது. இதனால் அங்கு தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடம்போடுவாழ்வு பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீரும் வரவில்லை. இதனால் குடிக்க கூட தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் எடுக்க சென்றனர். ஆனால் அங்கும் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டது.
குளத்து தண்ணீரை பருகுகின்றனர்
இதையடுத்து வேறு வழியின்றி ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் உள்ள குளத்தில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இந்த தண்ணீரை தான் பருகுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மாசுபட்ட தண்ணீரை பருகுவதால் பொதுமக்களுக்கு நோய்கள் பாதிக்கும் நிலை காணப்படுகிறது. ஏற்கனவே இந்த கிராமத்தில் க்டந்த சில மாதங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் பரவி பெண் ஒருவர் இறந்தார். மேலும் பலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தெற்கு புளியங்குளம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.