சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட முறுக்குகள் பறிமுதல்

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சாலை ஓரத்தில் முறுக்கு விற்பனை கடைகள் உள்ளன.

Update: 2017-11-14 20:30 GMT

நெல்லை,

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சாலை ஓரத்தில் முறுக்கு விற்பனை கடைகள் உள்ளன. இந்த வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், புகை, தூசுகள் முறுக்கு மீது படிந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டது.

இதுபற்றி உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவுத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் நேற்று முறுக்கு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் முறுக்குகள் உள்ளிட்ட உணவு பண்டங்களை குவித்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் முறுக்கு உள்ளிட்ட உணவு பண்டங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் ஆகும். மேலும் உணவு பொருட்களை பாதுகாப்பான முறையில் மூடி வைத்து விற்பனை செய்யுமாறு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்