வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
அடுக்கம்பாறை,
பேரறிவாளன் 2 மாதம் பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பரோல் முடிந்து கடந்த மாதம் 24–ந் தேதி மீண்டும் பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுநீர், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.சிகிச்சைக்கு பின்னர் பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.