இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் 4 பேரும் கைதானார்கள்.

Update: 2017-11-13 22:52 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பெருமாள்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு இருந்த அயத்தூரை சேர்ந்த பன்னீர்செவ்வம்(வயது 64), வேப்பம்பட்டை சேர்ந்த வரதராஜன்(51), தண்டபாணி(52), மோகன்(35), சென்னை சூளைமேட்டை சேர்ந்த சம்சுதீன்(61), சென்னை தங்கசாலையை சேர்ந்த திருநாவுக்கரசு(55), வியாசர்பாடியை சேர்ந்த மணி(57), பிரபாகர்(54),மேல்நல்லாத்தூரை சேர்ந்த விஷ்ணு(25), பெரம்பூரை சேர்ந்த ரவி(30), கிண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(54), செல்வக்குமார்(40), மண்ணிவாக்கத்தை சேர்ந்த மற்றொரு ரவி(51), அகரத்தை சேர்ந்த துரைராஜ்(51), ஆற்காடுகுப்பத்தை சேர்ந்த சரவணன்(37), பெருமாள்பட்டை சேர்ந்த மூர்த்தி(33), குட்டி(35), பாலாஜி(52), செங்குன்றத்தை சேர்ந்த கோபிராசு(38) ஆகிய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மற்றொரு இடத்தில் 4 பேர் அமர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சென்னை வியாசர்பாடியை சோந்த பாபு(43), நாகராஜ்(57), பாலமுருகன்(46), படாளத்தை சேர்ந்த நாகராஜன்(50) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்