கொட்டரை நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் கலெக்டரிடம் மனு
மாணவ, மாணவிகள் நலன் கருதி கொட்டரை நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெரம்பலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 291 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமம் மேற்குதெருவை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள கொட்டரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் உயர்நிலை, மேல்நிலை கல்வியை பயில்வதற்காக மருவத்தூர், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட வெளியிடங் களிலுள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே கொட்டரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் சார்பாக கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களை கூறி கல்வி அதிகாரி ஒருவர் இந்த கருத்துருவை தாங்கள் பரிந்துரைக்க இயலாது என கூறுகிறார். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராம மாணவர்களின் நலன் கருதி உயர்நிலைப்பள்ளியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் வடக்குமாதவிரோடு கணபதிநகர், வி.ஐ.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருடர்களின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த திருடர்கள் வீட்டின் கதவையும், கேட்டையும் தட்டி பார்த்து ஆள் இருக்கிறார்களா? என சோதிக்கின்றனர். ஆள் இல்லையெனில் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடும் செயலில் ஈடுபடுகின்றனர். ஒரு வேளை ஆட்கள் இருந்தது தெரிய வந்தால் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் 10 வீடுகளில் நகை-பணம் திருடு போயிருப்பது குறிப் பிடத்தக்கது. மேலும் திருடர் களால் தங்களுக்கு ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுமோ? என பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து திருடர்களை பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கமல்ஹாசன் தலைமை நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில் கமல் ரசிகர்கள் அளித்த மனுவில், பெரம்பலூர் ஆலம்பாடிசாலை சமத்துவபுரம் குடியிருப்பு பின்புறம் அமைந்துள்ள அங்காளம்மன் கோவில் அருகே வடக்கு தெப்பக்குளம் உள்ளது. இங்கு தேக்கி வைக்கப்படும் நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இது உதவிகரமாக இருந்தது. இந்நிலையில் இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாததால் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மழைநீரை தேக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்த குளத்தை தூர்வாரி மழைநீரை சேமித்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொள்ள எங்கள் நற்பணி இயக்கத்துக்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும். மேலும் இக்குளத்திற்கு அருகே சீட்டு விளையாடுதல், மதுஅருந்துதல் உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் தனியாக நடமாடமுடிவதில்லை. எனவே பொது இடங்களில் மதுஅருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்-தணிக்கை) பாலன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.